Friday, August 17, 2007

SubWay-
US வந்தபுதிது.. முதல் வேலை Boston ல, ஆனா நான் இருக்கும் இடம் ஒரு மூலை என்றால் அலுவலகம் அடுத்த மூலை, அலுவலகம் செல்வது ஒரு ஊர்பயணம் தான். காலையில் 7மனிக்கு புறப்பட்டு Bus பிடித்து ரயில்லடி வந்து ரயில்பிடித்து central boston வந்து அங்கிருந்து வடக்கு boston acton போயி அங்கிருந்து டாக்ஸி பிடித்து அலுவலகம் வந்து சேர 9 மணி ஆகிவிடும். இப்படியே ஒருமாதம் ஒட்டியாச்சு. லைசன்ஸ் இருந்தால் வாடகைக்கு கார் எடுத்து அலுவலகம் போனால் சீக்கிரம் பொய்விடலாம் என்று எனுவதற்கு முன்பே.. வேலை முடிந்துவிட்டது.

சரி இப்பதான் வேலை இல்லையே லைசன்ஸ் எடுக்கலாம்னு, அதைபடித்து முதல் டெஸ்ட், parallal parking வெற்றிகரமா முடிச்சாச்சி இரண்டாவது 3பாயிண்ட் டர்ன் அதையும் முடிச்சாசு, கடைசி ஒரு டெஸ்ட், ரிவர்ஸ் எடுக்கனும் அதையும் ஒழுங்கா எடுத்தாச்சு, அருகில் இருந்த இன்ச்பெக்டர் ஓகே அப்படினார், நான் சந்தோஷத்தில் பிரேக்கில் கால்வைப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரில் கால்வைக்க.. அவ்வுளவுதான்..

மறு நாள் மீண்டும் நன்றாக ஓட்டி லைசன்ஸ் வாங்கியச்சு. முதன் முதலில் கார் ரெண்ட்ல் எடுத்து எங்கு செல்லலாம்னு யோசிச்சு. ஒரு சனிக்கிழமை கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப வந்துகொண்டு இருந்த்தோம், நம்ம நன்பர் சப்வே வந்தால் காரை நிருத்த சொன்னார், நான் சப்வே வருகிறதான்னு பார்த்துக்கொண்டு வந்தேன், நன்பர் காரைதிருப்புன்கள் நான் எங்கடா சப்வேயே கானும் பாக்க அவர் சப்வே போயிடுச்சுன்னார், எனக்கும் ஒன்னும் புரியவில்லை சப்வே எங்காடான்னு.. என்னங்க நேர் ரோடுதானே இருக்கு சப்வே இல்லையேன்னுன், அதுக்கு.. அவர் அய்யோ அது சாப்பாட்டு கடைபேருங்க.. அதற்குள் இன்னும் ஒரு சப்வே கடைவரவே அதில் நுழைத்து என்ன ஆர்டர் பன்னலாம் பார்த்து சரி எதோ ஒன்னு சொன்னால் அவள் அதற்கு ஒயிட்டா வீட்டா அப்படினா...

நமக்கு பர்கர்கிங் மேக்டோனல்ட் போயி எதோ ஒரு நம்பர் சொல்லி சாப்பிட்ரது.. இங்க என்னாடான ஒயிட்டா வீட்டாங்குது...

என்னாடாயிது புதுசா இருக்கு, அது ஏதோ புது அயிட்டம்னு நினைத்து அது வேண்டாம் சொன்னா அவள் ஒருமாதிரி பார்க்கிறா ஒன்னும் புரியல்ல.. அவள் திருப்பி ஒயிட்டா வீட்டாங்கிறா இது என்னாடா புது குழப்பம்னு, என்னம்ம சொல்ற அப்படின்ன அவள் கையில் இருண்டு பிரட் வைத்து என்னவேண்டும்னா. அப்பறம் தான் ஒ.. அம்மனி ஒயிட் பிரட் வேனுமா வீட் ப்ரட் வேனுமா கேட்டது புரிந்தது.. இதுவே இப்படி காண்னன கட்டுதே என்றால் .

அடுத்த கேள்வி அதைவிட மோசம்.. இன்ச்/பூட்லாங்..
இது என்னடா புதுசா இருக்குன்னு..பேந்த பேந்த முழித்தால்... அம்மனி... நன்பா என்னை காப்பாத்துன்னு நன்பனை உதவிக்கு அழைத்தால் அவன் அக்கா பிரட் சைஸ் என்னனு கேட்க்குதுன்னான்.. அப்பாடா இன்னும் எதாவது கேட்பதற்குள் நான்பன் வந்து ஏதோ சொல்லி சான்விச் வாங்கியாச்சு...

Thursday, July 20, 2006

என் லிப்ட் அனுபவம்..

சென்னை வந்த புதிது. அப்ப நாங்க நந்தனதில் 10 மாடி கட்டிடம் பக்கத்தில் வீடு. முதல் முதலில் அப்பத்தான் லிப்ட் பாத்தோம். அது எப்படி ஆட்களை ஏத்திகிட்டு மேலே போகுது அதை பார்க்க ரோம்ப அச்சர்யம். நாமும் அதில் ஏறி போகனும் ஆசை ஆனால் அந்த லிப்ட் ஆப்பரேட்டர் எந்த மாடி அப்புறம் யார் வீட்டுக்குன்னு கேட்ப்பான், எனக்கு அப்பா யாறையும் தெரியாது அதுக்காக அவன் என்னை லிப்ட்டில் எத்தாமாட்டான்.

ஒரு நாள் அங்கவுள்ள பேர் பலகை படித்து 10வது மாடியில் வசிக்கும் ஒருவர் பேர் சொல்லி அவர் வீட்டுக்கு போக வேண்டும் என சொல்லி 10வது மாடியில் இருந்து மேலே போயி பார்க்கும்போது. சென்னை இவ்வளவு அழகா, பச்சை பசேல் எவ்வளவு தென்னை மரம் அப்படியே அசந்து போயிட்டேன்.

அப்படியே லிப்ட்ட்ல் போற அச்சை நிறைவேருச்சு..